இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கிளிண்டன் மகள் காதல் திருமணம்.

E-mail அச்செடுக்க

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மகள் செல்ஷியா. இவருடைய தாயார் ஹிலாரி கிளிண்டன் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார். செல்ஷியாவும் மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவரும் நீண்ட கால காதலர்கள். மெஷ்வின்ஸ்கியின் பெற்றோர்கள் முன்னாள் எம்.பி்.க்களாக இருந்திருக்கிறார்கள். செல்ஷியாவுக்கு வயது 30. மணமகனுக்கு வயது 32.


செல்ஷியாவுக்கும் மெஷ்வின்ஸ்கியுக்கும்  ஜூலை மாதம் 31ம் திகதி நடைபெற உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணத்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்ற பட்டியல் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. நியுயார்க்கில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவுள்ள எஸ்டேட்டில் திருமணம் நடைபெற இருக்கிறது.


கடந்த வருடம் காதலர்கள் திருமணம் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி அதனை கிளிண்டன் தம்பதியினர் மறுத்திருந்தனர்.
கருத்துக்கள் (1)Add Comment
மல்லிகை நேசன்
...
எழுதியவர்: மல்லிகை நேசன், July 22, 2010
அமெரிக்காவில் எந்தத் திருமணம் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து நடைபெறுகிறது? எல்லாமே காதல் திருமணம்தானே....smilies/kiss.gif

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்