இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மிரட்டல் எதிரொலி - கருணாஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

E-mail அச்செடுக்க
நடிகர் கருணாஸ் தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு தேவை என்றும் காவல்துறை ஆணையரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ், தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தனக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் வருவதாக கருணாஸ் சனிக்கிழமையன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் கோவிலில் தனது மகனுக்கு தலை முடி காணிக்கை செலுத்த வேண்டி இருப்பதால், இலங்கை செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், அதோடு இலங்கை வானொலியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவும் முடிவு செய்து இருந்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள டபிள்ï பிளாக்கில் வசிக்கும் கருணாசின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்