இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மலையாள சினிமாவில் நடிக்கிறார் பாக் வீரர் ஆசிப்!

E-mail அச்செடுக்க
பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் மலையாளம் சினிமாவில் நடிக்க இருப்பதாக அந்தப் படத்ததை இயக்கவுள்ள பிரபல மலையாளப் பாடல் ஆசிரியர் கைத்தபரம் தாமோதரன் நம்பூதிரி கூறியுள்ளார்.

"மழவில்லினாட்டம் வரெ" என்ற பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் என்றும் கைத்தபரம் கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் முகமது ஆசிப் நடிப்பது மட்டுமின்றி, இதுவரை மலையாள சினிமாவில் பல நூறு பாடல்களை எழுதி தேசிய விருதுகள், மாநில விருதுகள் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள கைத்தபரம் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.

கண்ணூரில் நடைபெறும் கிரிக்கெட் ஆட்டத்திற்கு பயிற்சியாளராக பாகிஸ்தானின் லாஹூரில் இருந்து ஆசிப் வருகிறார். லாஹூரில் இருந்து கேரளா வரும்போது வேறு ஒரு காரியத்திற்காகவும் வருகிறார். அது என்ன காரியம்? அதில் எவ்வாறு அவர் வெற்றி பெறுகிறார் என்பது போன்று கதை திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்யும் கண்ணூரைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: jeganathan, July 28, 2010
Why so particular that cricket player Asif,selected to act as a coach.Could n't find any one in India to act ?

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்