இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அமித் ஷாவிடம் சிபிஐ விசாரனையை தொடங்கியது - மோடி கலக்கம்

E-mail அச்செடுக்க

போலி என்கவுண்டர் வழக்கில் கைதான குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், முதல்வர் நரேந்திர மோடியின் முக்கிய உதவியாளருமான அமித் ஷாவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரனையை ஆரம்பித்தனர்.

சிபிஐ கண்காணிப்பாளர் அமிதாப் தாக்குர் தலைமையிலான அதிகாரிகள் சுமார் 32 கேள்விகள் அடங்கிய பட்டியலை கொடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரனையின் போது இரு வீடியோ புகைப்படக்காரர்களும், வழக்கறிஞர் ஒருவரும், சிறை கண்காணிப்பாளரும் உடனிருந்தனர். 2005 ஆம் ஆண்டில் நடந்த போலி என்கவுண்டரில் சொரப்தீனும், அவருடைய மனைவியும்  கொல்லப்பட்டது தொடர்பாக திரு ஷா சில தினங்களுக்கு முன் கைது செய்ப்பட்ட்து குறிப்பிடத்தக்கது.

இத்ற்கிடையே, அமித் ஷா சார்பாக ஜாமீன் மனுவை பிரபல வழக்கறிஞரும், பாஜக ராஜ்ய சபை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி தாக்கல் செய்த மனு, ஆகஸ்ட் 2ந்தேதி அன்று விசாரனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்