சிறுபாக்கத்தில் சுற்றித் திரிந்த வெறி நாய்கள் கடித்து நான்கு பேர் படுகாயமடைந்தனர். சிறுபாக்கம் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்தவர்கள் வீராக்கி (55), சேகர் (42), வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் பூமாலை (31), ராமலிங்கம் (28). நால்வரும் தனித்தனியே நேற்று முன்தினம் மாலை கடைவீதி, பஸ் நிலையங்களில் நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற வெறி நாய்கள் நால்வரையும் கடித்துக் குதறியது. பலத்த காயமடைந்த நால்வரும் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், லப்பைக்குடிக்காடு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




