சென்னை: பூரண மதுவிலக்கு அறிவிப்பை சுதந்திரத் தினத்தின்று வெளியிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
தமிழ்நாட்டில் மீண்டும் மதுவிலக்கை கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதை வரவேற்கிறோம். இந்த மகிழ்ச்சியான செய்தியை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சுதந்திர தின உரையில் மதுவிலக்கை கொண்டு வரும் அறிவிப்பை வெளியிடுங்கள் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் தலைவர்களான பெரியார், அண்ணா, காமராசர் என்று அனைவரும் மதுவிலக்கிற்கு ஆதரவான கொள்கையை கொண்டிருந்தார்கள் என்றும், அதனையே தமிழக முதல்வரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




