சென்னை: முறையாக மருத்துவ படித்து பதிவு செய்து கொண்ட சித்த மருத்துவர்கள், ஆங்கில முறை மருத்துவம் செய்ய தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்த, சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என காவல்துறையினர் கைது செய்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது முறைப்படி பதிவு செய்த சித்த மருத்துவர்கள், ஆங்கில முறை மருத்துவம் பார்க்க தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




