இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஈழம் நாசமாக கருணாநிதிதான் காரணம்-பழ .கருப்பையா

E-mail அச்செடுக்க
தமிழ் ஈழம் நாசமாக கருணாநிதிதான் காரணம் என்றும், இந்த முறை ஜெயலலிதா ஆட் சிக்கு வந்த பின் இனி எப்போதும் கருணாநிதி ஆட்சிக்கு வர முடியாது என்றும். பழ .கருப்பையா கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் இலக்கிய அணி தலைவர் பழ.கருப்பையா பேசும்போது  கூறியதாவது:

கருணாநிதி அழகிரியை வழக்கிலிருந்து காப்பாற்றி இருக்கலாம்.ஆனால். குற்ற வழக்குகள் முடிவடைவதில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அழகிரி போக வேண்டிய இடத்திற்கு போவார். விலைவாசி உயர்வால் மக்கள் வாழ முடியாத நிலையை தி.மு.க., ஏற்படுத்தியுள்ளது.

காமராஜர், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., ஆகிய 3 பேரின் ஆட்சிமட்டும் தான் தமிழகத்தில் நடந்த  சிறப்பான ஆட்சியாகும். மக்களிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. அதனால் கருணாநிதி அஞ்சுகிறார். கருணாநிதி தி.மு.க., வை குடும்ப சொத்தாக மாற்றி விட்டார்.

ஈழம் நாசமாக கருணாநிதிதான் காரணம். கருணாநிதி என்ன கடவுளா? என நான் எழுதியதற்காக தாக்கப் பட்டேன். மக்களுக்காக இலவச டி.வி., வழங்கப்படுகிறதா? மருமகன் சம்பாதிக்க வழங்கப்படுகிறதா?

இந்த முறை ஜெ., ஆட் சிக்கு வந்த பின்பு, இனி எப்போதும் கருணாநிதி ஆட்சிக்கு வர முடியாது. தமிழகத்தின் நிதி நிலை சரியில்லை. சிந்திக்க கூடிய நிலை இல்லாமல் மக்களை ஆக்கி விட்டார் கருணாநிதி. கரும்பு சக்கை விலை கூட கரும்பு விவசாயிக்கு கிடைக்கவில்லை.யாருக்கும் நன்மை செய்யாத ஆட்சி தி.மு.க., ஆட்சி. எதற்காக இந்த ஆட்சி நீடிக்க வேண்டும்?

இவ்வாறு பழ. கருப்பையா பேசினார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்