ஆந்திரமாநிலம் தெலுங்கானா பகுதிகளில் நடைபெற்ற 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்ட மன்றத் தேர்தலில் தெலுங்கானா பகுதியில் பெரும் வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 12 இடங்களில் 11 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றி இருந்தது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என டி.ஆர்.எஸ். தலைவர் சந்திர சேகர ராவ் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது கட்சியினரும் பாஜக உறுப்பினர் ஒருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அதனைத் தொடர்ந்து 12 இடங்களுக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மீண்டும் 11 இடங்களை டி.ஆர்.எஸ்.ஸும் ஒரு இடத்தை பாஜகவும் கைப்பற்றியுள்ளன. டி.ஆர்.எஸ். தலைவர் சந்திர சேகர ராவ் 95,858 வாக்குகள் பெற்று எவரும் நெருங்க முடியாத வெற்றியை பெற்றுள்ளார்.
இதில் காங்கிரஸ் மாநில தலைவர் ஸ்ரீநிவாஸ் டி.ஆர்.எஸ். தலைவரிடம் தோல்வியை தழுவியுள்ளார். தெலுகு தேசம் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அக்கட்சி பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




