ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி நிலவரம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஆண்டிப்பட்டி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 18ம் தேதி மருத்துவ முகாம் நடத்திய மத்திய அமைச்சர் அழகிரி, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். அடுத்த தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்றும் பேசினார். பின்னர் அ.தி.மு.க. சார்பில் கடந்த 25ஆம் தேதி போட்டிக் கூட்டம் போட்டு அழகிரியை விமர்சனம் செய்தனர். ஜெயலலிதா., மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மேடையிலேயே அறிவித்தார்.
இந்நிலையில் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளரை ஜெயலலிதா நேற்று முன்தினம் போயஸ் கார்டனுக்கு அழைத்து, ஆண்டிப்பட்டி தொகுதி நிலவரம் குறித்து 15 நிமிடம் ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதா மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொகுதி மக்கள் சார்பில் விடுத்த வேண்டுகோளை ஜெயலலிதாவிடம் தெரிவித்ததாக ஆண்டிப்பட்டி ஒன்றியச் செயலாளர் பால்பாண்டியன் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




