இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மருத்துவ மாணவர்கள் இருவருக்கு பன்றிக்காய்ச்சல்!

E-mail அச்செடுக்க
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யபப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கேரளாவில் இருந்து பன்றிக் காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்தும் குமரியில் பன்றி காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி பன்றிக்காய்ச்சல் தனி வார்டில் கூடுதலாக இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தரியில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் பன்றிக்காய்சல் அறிகுறியுடன் வருபவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்த வார்டில் ஏழுபேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில் நான்கு பேர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள். இவர்களின் ரத்தம் மற்றும் சளி உள்ளிட்டவை பெறப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முத்துக்குமார், பன்னீர் செல்வம் ஆகியோர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் ரத்தம், சளி உள்ளிட்டவை சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போதிய முன்னேற்பாடுகளை செய்து வருவதாக  சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்