இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கும்பகோணம் தீ விபத்து - 3 அதிகாரிகள் விடுவிப்பு!

E-mail அச்செடுக்க

94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இருந்து கல்வித்துறை அதிகாரிகள் 2 பேரும், தாசில்தார் ஒருவரும் விடுவிக்கப்பட்டனர். பள்ளி

நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 21 பேரின் விடுவிப்பு மனுக்களை தள்ளுபடி செய்து தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் கடந்த 16.7.2004 அன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் பயின்ற 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். மேலும் 18 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி, தாளாளரான அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியையான மகள் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல் உதவியாளர் வசந்தி உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் இருந்து தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையில், நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், சம்பவம் நடந்த போது தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றிய முத்து. பழனிச்சாமி, தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணன் ஆகியோர் மீதான குற்ற நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ளலாம் என தமிழக கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டது.

இதே போன்று, சம்பவத்தின் போது கும்பகோணம் தாசில்தாராக பணியாற்றிய பரமசிவத்தின் மீதான குற்றநடவடிக்கைகளை விலக்கிக் கொள்ளலாம் என வருவாய்த்துறை அரசாணை வெளியிட்டது.

இதன் அடிப்படையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்வதாக அரசு தரப்பு வக்கீல்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்டு இந்த மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீனாட்சிசுந்தரம் நேற்று உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரும் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி உள்ளிட்ட மற்ற 21 பேரின் விடுவிப்பு மனுக்களையும் நீதிபதி மீனாட்சி சுந்தரம் தள்ளுபடி செய்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்