அசாம் மாநிலம் சோல்பாரா என்ற மாவட்டத்தில் உள்ள வனபகுதியில் நேற்று காலை சக்தி வாய்ந்த கண்ணிவெடி வெடித்ததில் 4 மத்திய போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலத்தில் "போடோ" தீவிரவாதிகள் சமீப காலமாக தனது நாசவேலைகளை அதிகரித்துள்ளனர். சோல்பரா என்ற மாவட்டத்தில் மத்திய போலீஸ் படையினருக்கான சிறப்பு பயிற்சி முகாம் உள்ளது. இங்கு பயிற்சி முடித்துவிட்டு 20 போலீசார் கொண்ட ஒரு குழு ஒரு மினி பஸ்சில் ஏறி கண்காணிப்பு பணியில் ஈடுபட சென்று கொண்டிருந்தனர்.
அந்த பஸ் ஹல்மாரி என்ற காட்டுப்பகுதியை அடைந்ததும் போடோ தீவிரவாதிகளால் ரோட்டின் மத்தியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 4 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் பலரின் நிலமை கவலைகிடமாக உள்ளது.
படுகாயம் அடைந்த வீரர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் நிலமை மிகவும் மோசமாக உள்ளது.
அசாம் மாநிலத்தில் "உல்ஃபா" என்ற ஹிந்துத்துவ சிந்தனையுடைய திவிரவாதிகள் அடிகடி பொதுமக்கள் மீதும் போலீஸார் மீதும் தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்நிலையில் போடோ திவிரவாதிகளின் இந்த தாக்குதல் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




