ரியாத் : சவூதி சட்ட அமைச்சகம் நடத்திய ஆய்வின் படி கடந்த வருடம் மட்டும் சவூதி பெண்கள் கேட்க்கும் வரதட்சணையை கொடுக்க முடியாமல் 2100 ஆண்கள் வெளிநாட்டு பெண்களை மணமுடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பொதுவாக ஆண்கள் தான் பெண்ணிடம் இருந்து வரதட்சணை வாங்குவார்கள். ஆனால் சவூதி போன்ற முஸ்லீம் நாடுகளில் பெண்ணுக்கு தான் ஆண் வரதட்சணை கொடுப்பார்கள். சமீபகாலமாக சவூதி பெண்கள் கேட்கும் அதிகபட்ச வரதட்சணையை கொடுக்க முடியாமல் வெளிநாட்டு பெண்களை சவூதி ஆண்கள் மணமுடிக்க ஆரம்பித்துள்ளனர்.
சென்ற ஆண்டில் மொத்தம் 2100 ஆண்கள் வெளிநாட்டு பெண்களை மணமுடித்துள்ளனர். அதில் சரி பாதி 1017 நபர்கள் ஏமன் நாட்டு பெண்களையும், 164 நபர்கள் சிரிய பெண்களையும் 145 நபர்கள் பாகிஸ்தானிய பெண்களையும் 104 நபர்கள் பலஸ்தீன் பெண்களயும் மணமுடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தியா, இங்கிலாந்து, இந்தோனேசியா பெண்களையும் மணமுடித்துள்ளனர்.
அதிக வரதட்சணை மட்டுமின்றி சில பெண்ணின் தந்தைகள் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் மகளின் சம்பளத்துக்காக திருமணத்தை தாமதப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. சவூதியில் தற்போது சுமார் 15 லட்சம் பெண்கள் திருமண வயதை அடைந்தும் திருமணம் புரியாமல் முதிர் கன்னிகளாக வாழ்கின்றனர். பிரபல சமூகவியலாளர் ஹமூத் அல் அவ்தி சமூக சூழலை கருத்தில் கொண்டு சவூதி அரசாங்கம் பெண்கள் வரதட்சணை வாங்குவதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




