இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காமன்வெல்த் விளையாட்டு போட்டி - ஊழlலோ ஊழல்

E-mail அச்செடுக்க

புது டில்லி:- காமன்வெல்த விளையாட்டு போட்டிகள் தொடர்பாக புது ஊழல் குற்றச்சாட்டு பூதகரமாக கிளம்பியுள்ளது. இலண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இது குறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில்.. சுமார் 25000 பெளன்டுகள், ஏஎம் பிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு மாதா மாதம் அனுப்பட்டுள்ளதாக தூதரகத்துக்கு பிரிட்டிஷ் அரசு தகவல் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. ஆனால் அனுப்பப்பட்டுள்ள இந்நிதிக்கு முறையான ஒப்பந்தம் இல்லை என பிரிட்டிஷ்  அரசு தகவல் தெரிவித்துள்ளது எனவும், மேல் விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய கேபினட் செயலர் உடனடி விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மைதானங்கள் கட்டுவதில் தாமதம் மற்றும் ஊழல் நடந்துள்ளவை குறித்தும் விசாரிக்கபட்டு வருவதாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, குற்றச்சாட்டை கடுமையாக மறுத்து போட்டி அமைப்பாளர் குழு தலைவர், சுரேஷ் கல்மாதி அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் இவ்வகையான ஊழல் குற்றச்சாட்டுகளால் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், போட்டிகளுக்காக செலவிடப்படும் அனைத்து நிதியும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்