கலிபோர்னியாவை தளமாக கொண்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று, இந்திய அரசு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்கள் பெற்றதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
கன்ட்ரோல் காம்போனென்ட்ஸ் என்ற நிறுவனம் இந்தியாவின் பெல், ஹரியான மாநில மின்சார வாரியம், மஹாராஷ்டிர மாநில மின்சார வாரியம், தேசிய அனு மின் ஆலை ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு, இயந்திர பொருட்கள் வழங்குவதற்காக இலஞ்சம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. கன்ட்ரோல் காம்போனென்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 36 நாடுகளை சேர்ந்த அரசு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இல்ஞ்சம் வழங்கியதாக, நீதிமன்ற ஆவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்ட அமெரிக்க நீதி துறை, இல்ஞ்சம் பெற்ற அதிகாரிகளின் பெயர்களை விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




