மெஸ்கோ மரைன் சர்வீஸ் நிறுவன ஊழியர்கள் பெயரில் கிரெடிட் கார்டுகள் வாங்கி ரூ.80 கோடி மோசடி செய்து தமிழ் சினிமா தயாரிப்பாளரான சிதம்பரம் செண்பககுமாரை துபாய் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
ஆறுமுகம், மகேஷ், பிடிச்சிருக்கு, சரண்யா மற்றும் பலர் ஆகிய படங்களை தயாரித்தவர் . இவர் மெஸ்கோ மரைன் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துபாயில் நடத்தி வருகிறார்.இவரது நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பலர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களது பெயரில் சிதம்பரம் செண்பககுமார், வங்கிகளில் கிரெடிட் கார்டுகள் வாங்கி, அதை வைத்து, ரூ.80 கோடிகள் வரை மோசடி செய்த புகாரின் பேரில் துபாய் போலீசார் அவரை கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர்.
இவரால் ஏமாற்றப்பட்ட தமிழக ஊழியர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கு தவித்து வருகிறார்கள்.இது தொடர்பாக சென்னை அசோக்நகரில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர் அமைச்சக அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புகார் மனு அனுப்பி உள்ளனர்.
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் இந்த புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.அதில், 2 ஆண்டுகளாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சம்பளம் தரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துபாயில் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த புகார் மனு போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




