இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை 15% ஆக அதிகரிக்க ம.அரசு தீவிரம் - சல்மான் குர்ஷித்

E-mail அச்செடுக்க
அரசுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் சிறுபான்மையினர் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள்,  பார்சி இனத்தவர்களுக்கு அரசுத் துறை நிறுவனங்களில் போதிய வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதை வலியுறுத்தி சென்றமாதம் பிரபல தமிழ் இஸ்லாமிய அமைப்பு ஒன்று சென்னையில் இலட்சக்கணக்கான முஸ்லிம்களைத் திரட்டி கோரிக்கை வைத்தது.

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 20 முஸ்லிம் எம்.பி.க்கள், சல்மான் குர்ஷீத்தை சந்தித்து, அரசுத் துறை நிறுவனங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்தனர். "அரசுத்துறை நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு உரிய வாய்ப்பளிக்கப்பட வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சல்மான் குர்ஷீத் கூறுகையில், "எம்.பி.க்களின் கோரிக்கை நியாயமானது. அரசுப் பணிகளில் சிறுபான்மையினர் புறக்கணிப்படுவதாகச் சொல்லப்படுவதை முற்றிலும் ஏற்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பணிகளில் சேரும் சிறுபான்மையினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் அரசுத் துறைகளில் 9.5 % சிறுபான்மையினர் பணியில் சேர்ந்துள்ளனர். இதை 15 % உயர்த்துவதே அரசின் நோக்கம். அரசு நிறுவனங்களில் பணியாற்றும் சிறுபான்மையினரைக் கணக்கெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதை அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்