கோபி பள்ளியில் போலி ஆசிரியர் - கல்வித்துறை கண்டுபிடித்தது
போலி மருத்துவர், போலி போலீஸ், போலிச்சாமியார் வரிசையில் இப்போது போலி ஆசிரியர்
ஒருவர் கோபியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக வேலுச்சாமி என்ற ஆசிரியருக்கு பதிலாக லதா என்ற
வேறொரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
கோபியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல்
பாடப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வேலுச்சாமி. கடந்த நான்கு
ஆண்டுகளாக வேலுச்சாமி பள்ளிக்கு காலையில் வந்து கையெழுத்திட்டுவிட்டு
போய்விடுவது வழக்கமாக இருந்துள்ளது. அவருக்கு பதிலாக லதா என்பவரை ஆசிரியராக
அவரே நியமித்து, அவருக்கு மாதம் சம்பளமாக ரூ.2,500 ரூபாய் கொடுத்து
வந்துள்ளார். இந்த ஆள்மாறாட்டத்தை மாணவர்கள் கண்டுபிடித்து மாவட்ட
கல்வித்துறையிடம் புகார் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று அந்த பள்ளியில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட
முதன்மை கல்வி அலுவலர், வருகை பதிவேட்டை சோதித்தபோது ஆசிரியர்
வேலுச்சாமி கையெழுத்து போட்டு சென்றது தெரியவந்தது. ஆசிரியர்
ஒருவர், நான்கு ஆண்டுகளாக தான் பாடம் நடத்தாமல் வேறொரு ஆசிரியரரை வைத்து
பாடம் நடத்தியது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆள்மாறாட்டம் வெளிப்பட்டதையடுத்து வேலுச்சாமி, போலி ஆசிரியர் லதா ஆகிய
இருவரும் தலைமறைவாகினர்.இதனிடையே ஆசிரியர் வேலுச்சாமி மீது
துறைரீதியாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
போலி மருத்துவர், போலி போலீஸ், போலிச்சாமியார் வரிசையில் இப்போது போலி ஆசிரியர்
கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்தும் அதன் தரம் குறித்தும்
அவர்கள் கவலை கொள்ள தொடங்கியுள்ளனர்.
போலி மருத்துவர், போலி போலீஸ், போலிச்சாமியார் வரிசையில் இப்போது போலி ஆசிரியர் ஒருவர் கோபியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக வேலுச்சாமி என்ற ஆசிரியருக்கு பதிலாக லதா என்ற வேறொரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோபியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வேலுச்சாமி. கடந்த நான்கு ஆண்டுகளாக வேலுச்சாமி பள்ளிக்கு காலையில் வந்து கையெழுத்திட்டுவிட்டு போய்விடுவது வழக்கமாக இருந்துள்ளது. அவருக்கு பதிலாக லதா என்பவரை ஆசிரியராக அவரே நியமித்து, அவருக்கு மாதம் சம்பளமாக ரூ.2,500 ரூபாய் கொடுத்து
வந்துள்ளார். இந்த ஆள்மாறாட்டத்தை மாணவர்கள் கண்டுபிடித்து மாவட்ட கல்வித்துறையிடம் புகார் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று அந்த பள்ளியில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட முதன்மை கல்வி அலுவலர், வருகை பதிவேட்டை சோதித்தபோது ஆசிரியர் வேலுச்சாமி கையெழுத்து போட்டு சென்றது தெரியவந்தது. ஆசிரியர்
ஒருவர், நான்கு ஆண்டுகளாக தான் பாடம் நடத்தாமல் வேறொரு ஆசிரியரரை வைத்து பாடம் நடத்தியது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆள்மாறாட்டம் வெளிப்பட்டதையடுத்து வேலுச்சாமி, போலி ஆசிரியர் லதா ஆகிய இருவரும் தலைமறைவாகினர்.இதனிடையே ஆசிரியர் வேலுச்சாமி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
போலி மருத்துவர், போலி போலீஸ், போலிச்சாமியார் வரிசையில் இப்போது போலி ஆசிரியர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்தும் அதன் தரம் குறித்தும் அவர்கள் கவலை கொள்ள தொடங்கியுள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (2)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




