இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள ஃபாலஸ்தீன பகுதியில் ஒன்று தான் "காஸா" என்ற நகரம். சில மாதங்களுக்கு முன் இந்த பகுதியில் நடந்த தேர்தலில் ஹமாஸ் என்ற இயக்கத்தினரை மக்கள் தனது பாராளுமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து கொண்டனர். அன்றிலிருந்து காஸா பகுதி ஹமாஸின் கட்டுபாட்டில் வந்தது.
இந்நிலையில் இஸ்ரேலின் ஃபாலஸ்தீன நில ஆக்கிரமிப்பு சில தினங்களாக அதிகரித்து வருகின்றதால் அதனை தடுக்கும் விதமாக ஹாமாஸ் ராணுவத்தினர் இஸ்ரேலின் கடற்கரை நகரமான "ஆஷ்கெலன்" மீது ராக்கெட் குண்டு தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேலின் விமானப்படை காஸா பகுதியில் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், ஹமாஸ் ராணுவத்தின் சீனியர் கமாண்டர் இஷா பாட்ரான் (42) படுகொலை செய்யப்பட்டார். இவர் ராக்கெட் குண்டுகள் தாயாரிக்கும் வல்லுனர் ஆவார். இந்த தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காஸா பகுதியில் நடந்த இந்த விமானப்படை தாக்குதலில் பொது மக்களின் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் பலர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




