சிகாகோ: அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு லண்டனில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் 178 பயணிகளும் 12 விமான ஊழியர்களும் இருந்தனர்.
சிகாகோ விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விமானத்தில் அடிப்பகுதியில் உள்ள லேண்டிங் கியரில் உராய்வு ஏற்பட்டு திடீரென விமானத்தின் கீழ் பகுதியில் தீப்பிடித்தது. அடிப்பகுதியில் தீப்பிடித்ததால் தீ விமானம் முழுவதும் பரவும் நிலை ஏற்பட்டது. இதை கவனித்த விமானி விமானத்தை ஓடு பாதையில் அவசரமாக நிறுத்தினார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது.
இதனை தொடர்ந்து விமானத்தில் அவசர கதவுகள் திறக்கப்பட்டு பயணி களை உடனே இறங்கும்படி கூறினார்கள். பயணிகள் பீதியில் முண்டியடித்து அவசர கதவுகள் வழியாக இறங்கினார்கள். அதில் 3 பேர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதற்குள் விமானத்தில் உள்ள தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை கட்டுப்படுத்தினார்கள். காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மேலும்விமானம் நின்ற இடத்துக்கு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு இருந்தன. அதிர்ஷ்டவசமாக மற்ற பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்பதால் ஆம்புலன்சுகள் திருப்பி அனுப்பப்பட்டன.இதமால் சிக்காகோ விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




