இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ப்ளாக்பெர்ரி மொபைல் போன் மீதான தடையை நீக்க அமெரிக்கா முயற்சி

E-mail அச்செடுக்க

கனடாவின் ரிசர்ச்-இன்-மோஷன் நிறுவனத்தின் தயாரிப்பான பிளாக்பெர்ரி மொபைல் போன் தொடர்பான பாதுகாப்பு ஐயங்கள் குறித்து இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இணையம், மின்மடல்கள், தரவிறக்கம் போன்ற கணினித் தொடர்பான அனைத்தையும் செல்பேசி வாயிலாக செயல்படுத்தும் வசதிகளை பிளாக்பெர்ரி ஸ்மார்ட் போனின் சேவையை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லையென சமீபத்தில் சில நாடுகள் முடிவெடுத்தன. பிளாக்பெர்ரி மூலம் பாதுகாப்பு அச்சுருத்தல் இருப்பதன் காரணமாகவே அதை தங்கள் நாட்டில் விற்க அனுமதி மறுத்ததாகச் சொல்லப்பட்டன.

உலக அளவில் பிளாக்பெர்ரியின் சந்தைப் பங்கு 21 %. உலகச் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ப்ளாக்பெர்ரி விற்பனைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சவூதி, அமீரகம் ஆகிய நாடுகளின் தடை இருப்பதால், அதற்குத் தீர்வு காண ரிசர்ச்-இன்-மோஷன் நிறுவனம் அமெரிக்க அரசின் உதவியை நாடியுள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சக பேச்சாளர் பி.ஜே.கிராலி, "ஐக்கிய அரபுக் குடியரசு, சவுதி அரேபியா, இந்தியா ஆகிய நாடுகளுடன் பேசமுடிவெடுத்துள்ளதாகவும், பிளாக்பெர்ரியின் பாதுகாப்பு தொடர்பாக அந்நாடுகள் கொண்டுள்ள ஐயங்களுக்குத் விரைவில் தீர்வு காணப்படும்" என்றும் கூறியுள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்