இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

44 கோடி ரூபாய் கறுப்பு பணம் - ஜெர்மனி வங்கியில் கண்டுபிடிப்பு

E-mail அச்செடுக்க

லெய்டென்ஸ்டின் (ஜெர்மனி): 18 இந்தியர்கள், கணக்கில் வராத  சுமார் 44 கோடி ரூபாயை  ஜெர்மனியின் எல்ஜிடி வங்கியில் பதுக்கி வைத்திருப்பதாகவும், இதனை சட்டபூர்வமாக மீட்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதி துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார்.

பதுக்கப்பட்ட 44 கோடி ரூபாய்க்கு, சுமார் 22 கோடி ரூபாய் அரசுக்கு வரி பணமாக வரவேண்டியுள்ளது என்றும், வருமான வரி துறை இது குறித்து மேல் விசாரனை செய்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், 18 பேர்களின் பெயரை குறிப்பிடவில்லை.

இந்திய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களின் கறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பதுக்கி வைத்து இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. எனினும் பாஜகவோ, காங்கிரஸோ இதனை மீட்போம் என்று உரக்க கூறினாலும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்