இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எலிகள் மகிழ்ச்சியாக உள்ளன

E-mail அச்செடுக்க
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாட்டு மக்களுக்கு உணவுக்குப் பாதுகாப்பு இருக்கிறதோ இல்லையோ, எலிகளுக்குத் தவறாமல் உணவு கிடைத்து விடுகிறது என்று சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் சாடியுள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த கட்சியின் விரிவுபடுத்தப்பட்ட மத்திய கமிட்டி கூட்டத்தில் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உணவு நிர்வாகம் படுமோசமாக உள்ளது. எலிகளுக்கு மட்டுமே இங்கு உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே பசியுடன் இருக்கும் மக்கள் அதிகமுள்ள நாடுகள் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து முன்னணி இடத்தில் கொண்டு வந்திருப்பது மிகப் பெரிய தேசிய அவலம்.

தேசிய உணவுக்கழக கிடங்குகளில் 6 கோடி டன் உணவு தானியங்கள் வீணாகிக் கிடக்கின்றன. அவற்றை எலிகள் சாப்பிட்டு மகிழ்ச்சியாக உள்ளன. ஏழை எளிய மக்களுக்கான உணவுப் பொருட்கள் எலிகளுக்கு தடையின்றி போய்க் கொண்டிருக்கிறது. மக்கள் நலன் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவலைப்படுவதே இல்லை என்றார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்