இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஈராக்கை ஓநாய்களிடம் விட்டு விட வேண்டாம் : சதாமின் வலது கரம் எச்சரிக்கை

E-mail அச்செடுக்க
லண்டன் : அமெரிக்கா தான் அறிவித்துள்ள படி படைகளை ஈராக்கிலிருந்து வாபஸ் பெற்றால் ஈராக் ஓநாய்களிடம் சிக்கி விடும். புஷ் செய்த தவறுக்கு ஒபாமா பரிகாரம் தேட வேண்டுமே தவிர இன்னொரு தவறை செய்து விட கூடாது என்று கார்டியன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹீசேனின் வலது கரமாய் திகழ்ந்த் ஈராக் முன்னாள் துணை அதிபர் தாரிக் அஜீஸ் கூறியுள்ளார்.

கடந்த ஏழரை வருடங்களாக சிறையில் வாடும் தன்னால் எந்த ஒரு சாதாரண குடிமகனோ, மதவாதியோ அல்லது ராணுவ வீரனோ பாதிக்கப்படவில்லை என்றும் ஒரு நபர் கூட அப்படி தான் குற்றம் இழைத்ததாக புகார் அளிக்கவில்லை என்றும் கூறினார்.

தான் புரட்சிகர படையின் உறுப்பினர், பாத் கட்சியின் தலைவர்களில் ஒருவர், ஈராக்கின் துணை பிரதமர் போன்ற பதவிகளை வகித்தேன் என்பதை ஒத்து கொண்ட தாரிக் அஜீஸ் தனக்கு மனித இனத்துக்கெதிரான குற்றம் புரிந்ததற்காக விதிக்கப்பட்ட 15 ஆண்டு கால தண்டனை அநீதியானது என்றும் கூறினார்.

சதாம் ஹீசைன் தான் முடிவெடுக்க கூடியவர் என்றும் துணை பிரதமர் என்ற முறையில் தன் கருத்துகள் சொன்ன போதும் இறுதி முடிவு எடுத்தவுடன் அதற்கு கட்டுப்படுவதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சொன்ன தாரிக் அஜீஸ் குவைத் ஆக்கிரமிப்பின் மூலம் அமெரிக்கா தலையிட அனுமதிக்க கூடாது என்று தான் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

செப்டம்பர் 11 தாக்குதல்கள் தமக்கும் சதாமுக்கும் அதிர்ச்சியளித்ததாகவும் அதை கண்டித்து சதாமின் உத்தரவின் பேரில் அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டதாகவும் கூறினார். ஆனால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் வேண்டுமென்றே பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக கதை கட்டி ஈராக்கை அழித்தனர் என்றும் இரு நாடுகளும் அதை இஸ்ரேலுக்காக செய்ததாகவும் குறிப்பிட்டார்.

சதாமின் காலத்தில் இருந்த உள்கட்டமைப்பு சிதைந்துள்ளதாகவும், அதிக நோயாளிகளும் ஏழைகளும் அதிகரித்து விட்டதாகவும் தினந்தோறும் மக்கள் கொல்லப்படுவதாகவும் வேதனை தெரிவித்த அஜீஸ் இத்தகைய வரலாற்று தவறுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் கூறினார். மேலும் தற்போது தன் படைகளை திரும்ப பெறுவதன் மூலம் ஓபாமா ஓநாய்களிடம் ஈராக்கை ஒப்படைத்து விடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: nidurali, August 08, 2010
ஓநாய் அல்ல பெரிய சைத்தான்
0
...
எழுதியவர்: mohamed ali, August 08, 2010
அமெரிக்கா மிக பெரிய சைத்தான்

0
...
எழுதியவர்: seasonsali, August 08, 2010
ஷ் செய்த தவறுக்கு ஒபாமா பரிகாரம் தேட வேண்டும்
வரலாற்று தவறுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் பதில் சொல்லியாக வேண்டும்
செப்டம்பர் 11 தாக்குதல்கள் தமக்கும் சதாமுக்கும் அதிர்ச்சியளித்ததாகவும் அதை கண்டித்து சதாமின் உத்தரவின் பேரில் அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டதாகவும் கூறினார்.

உண்மை . இறைவன் அறிவான் .காலம் பதில் சொல்லும்.
0
...
எழுதியவர்: nidurkrshakir, August 15, 2010
all the history america do the wrong things but very soon thay have to answer this atitudes all this for satisfie the israiles


கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்