மும்பை: இந்தியாவின் முன்னனி நிறுவனமான டாடா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக பொறுப்பிலிருந்து ரத்தன் டாடா விலகுகிறார். 72 வயதாகும் திரு ரத்தன் டாடா, அடுத்த வருடம் மார்ச் மாதம் விலக இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
இதனிடையே, ரத்தன் டாடாவின் ஓய்வுக்கு பின் நிறுவனத்தை வழிநடத்தி செல்லும் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுப்பதற்காக 5 பேர் கொண்ட நியமன குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, நிறுவனத்தின் உலகளாவிய வியாபார நலனை கருத்தில் கொண்டு, தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும்.
திரு ரத்தன் டாடா 1991-ஆண்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தின் கீழ் நிறுவனம் உலக அளவில் பல நிறுவனங்களை விலைக்கு வாங்கியது. அவற்றில் உலகின் பிரபல ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் கார்களும், கோரஸ் ஸ்டீல் நிறுவனமும் அடங்கும். 72 வயதாகும் ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




