திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்டியுள்ளார். துகுறித்து மத்தியஅரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என லியுறுத்தியுள்ளார்.
விஜயவாடாவில் நடைபெற்று வரும் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு ட்டம் முடிந்த பிறகு செய்தியாளார்களிடம் பேசுகையில், மேற்கு வங்கம் லால்கரில் 9ஆம் தேதி காவல்துறையினரின் அத்துமீறலுக்கு எதிராக மம்தா பானர்ஜி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் இதை அரசியல் சார்பற்ற பேரணி என்று அவர் குறிப்பிட்டுள்ளது பொய் என்று பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மம்தா தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் மாவோயிஸ்டுகளும் கலந்து கொள்ளவுள்ளனர். இப்பேரணியை மாவோயிஸ்டுகளும், மம்தாவும் இணைந்தே நடத்துகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. இதன் மூலம் இருவருக்கும் தொடர்புள்ளதும் உறுதியாகியுள்ளது.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு போராடி வரும் நிலையில் மத்திய அமைச்சர் மம்தா மாவோயிஸ்டுகளுடன் கைகோர்த்து செயல்படு வருகிறார்.இதில் மத்திய அரசின் நிலைப்பாடு தான் என்ன என்பது குறித்து காங்கிரஸ் விளக்க வேண்டும். இதை தெரிந்து கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி விரும்புகிறது என்றும் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
மம்தா-மாவோயிஸ்டுகளுக்கு இடையில் தொடர்பிருப்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்கிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம். ஆனால் மம்தாவோ மாவோயிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து பேரணி நடத்தவுள்ளார். பேரணியில் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர்கள் சிலரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றும் பிரகாஷ் காரத் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




