சிக்கிம்: சிக்கிம் மாநில தலைமை நீதிபதியாக திரு தினகரன் இன்று பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் பால்மிகி பிரசாத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நீதிபதி தினகரன் குறித்து இருந்து வரும் ஊழல் சர்ச்சை தற்போது அடுத்த கட்டத்தை நெருங்கியுள்ளது. கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக இருந்த போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என்றும், நீதிபதியாக இருந்த போது முறைகேடாக சொத்து சேர்த்தார் என்றும், வருமானத்திற்கு அதிகமான அளவில் பொருள் சேர்த்தார் என்றும், நிலங்களை தவறான வழியில் அபகரித்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்து நாடு முழுவதும் அவருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
மேலும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்கட்சிகள் அரசுகு கோரிக்கை விடுத்தன. இதற்கிடையில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை செய்து சிக்கிம் மாநில தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




