பெல்லாரி (கர்நாடகா): கர்நாடகாவில் சட்டத்திற்கு புறம்பாக சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் ரெட்டி சகோதரர்கள் மீது நடவடிக்கை கோரி காங்கிரசார் ஏற்பாடு செய்த பாதயாத்திரை இன்று பெல்லாரியை அடைகிறது.
இதற்கிடையே பெல்லாரி பகுதிக்குள் நுழைய தைரியம் இருக்கிறதா என காங்கிரசாருக்கு சவால் விடுத்த ரெட்டி சகோதரர்கள் பெல்லாரியை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவருடைய குடும்பத்தினருக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெல்லாரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 6000 போலிஸார் கலவர தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கர்நாடாகவின் லோகயுக்தாவின் தலைவர் பதவியிலிருந்து விலகிய திரு சந்தோஷ் ஹெக்டே, மீண்டும் பதவியில் தொடர ஒப்புக் கொண்டுள்ளார். ரெட்டி சகோதரர்கள் மீதான அதிருப்தியால் பதவி விலகிய ஹெக்டே, பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வற்புறுத்தலின் பேரில் தொடர்ந்து லோக்யுக்தாவின் தலைவராக தொடர ஒப்புக்கொண்டார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




