நெல்லை பல்கலை துணைவேந்தர் காளியப்பன் தி.மு.க. எம்.எல்.ஏ.,மாலை ராஜாவால் தாக்கப்பட்ட சம்பவத்தால் கல்வியாளர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை அண்ணா பல்கலையின் முதல் துணைவேந்தராக சு. காளியப்பன் முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், மூன்றாண்டு பணியினை நிறைவு செய்ய, ஒரு மாதமே உள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம்நெல்லை அண்ணா பல்கலையின் முதல் பட்டமளிப்பு விழா துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. திருநெல்வேலி தி.மு.கசட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா அண்ணா பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினராக உள்ளார். பட்டமளிப்பு விழாவில் தமக்கு அங்கி(கவுன்) அணிந்து செல்வது உள்ளிட்ட மரியாதை வழங்கப்படவில்லை என கூறி துணைவேந்தரிடம்அவரது அறைக்குள் கேட்க சென்றுள்ளார்.
அங்கு இருந்த சில ஆசிரியர்களுக்கும் மாலைராஜா உடன் வந்தவர்களுக்கும் இடை யே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் துணைவேந்தர் மீதும் தாக்குதல் நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. துணை முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காளியப்பனோ இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் செய்ய முன்வரவில்லை. உயர்கல்வித்துறையை சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டசம்பவம் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




