இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ரஜினி என்னை ஏமாற்றி விட்டார் : சிரஞ்சிவி

E-mail அச்செடுக்க

கோலாலம்பூர் :ரஜினி, மோகன்பாபு, சிரஞ்சிவி கலந்து கொண்ட எந்திரன் பட விழாவில் ரஜினி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சிரஞ்சிவி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனக்குள் இருக்கும் நடிகன் இறக்கவில்லை என்றும் நடிக்கும் ஆசை மீண்டும் துளிர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் தன் இரண்டு வருட படமான எந்திரனை பற்றி பேசும் போது முதலில் தன்னை ஷங்கர் வில்லனாக நடிக்க தன்னை கூப்பிட போகிறார் என்றும் ஷாரூக்கானை ஹீரோவாக போட போகிறார் என்றும் தகவல் வந்ததாகவும், எப்படி ஷங்கரிடம் தன்னால் வில்லனாக அப்படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பது என்று தர்மசங்கடத்தில் இருந்த போது ஷங்கர் தன்னை ஹீரோவாக நடிக்க கூப்பிட்ட போது ஆச்சரியத்தில் ஆழ்ந்ததாக கூறினார்.

பின் பேசிய சிரஞ்சிவி தன் சினிமாக்களில் சமூக செய்தியையும் வைத்து படம் எடுப்பதாக இயக்குநர் ஷங்கரை பாராட்டினார். மேலும் ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, ரஜினி, ஐஸ்வர்யா ராய் என சர்வதேச தரம் வாய்ந்த குழுவில் தான் இல்லாதது ரஜினியின் மீது பொறாமையை ஏற்படுத்தியது என்றார். மேலும் ரஜினி தான் முதலில் அரசியலுக்கு வருவார் என நினைத்தேன். அவர் வராமல் ஏமாற்றி விட்டார். தற்போது சிறந்த படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு பிறகு அரசியலுக்கு வருவதாய் சொன்ன நான் முதலில் வந்ததால் என்னால் படங்களில் நடிக்க முடியவில்லை என்றார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்