கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரியாத் நகரில் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கமான வசந்தம், மறைமலையடிகளாரின் பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.
இந்த விழாவில் தமிழ்நாட்டு விளையாட்டுகளான கில்லி, கோலிகுண்டு, நொண்டி, கோக்கோ போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதில் இளைஞர்கள், பெரியவர்கள் என கலந்து கொண்டு போட்டிகள் வெகுசிறப்பாக நடைபெற்றது.
பின்பு மறைமலையடிகள் பற்றிய விரியுரை திருமதி. தில்லைக்கரசி சிவகுமார் வழங்க, அடுத்து புலவர் அரங்கராசன் சிறப்புரையும், திரு நாக.இளங்கோவன் செம்மொழி மாநாட்டு அனுபவங்களை வழங்கினார்கள். நகைச்சுவை நாடகம், தமிழிசைப் பாடல் ஆகியவை இடம்பெற்றது. பின்னர், திருமதி. ரம்யா காமராஜ் அவர்கள் வசந்தம் அமைப்பின் கடந்தகால சாதனைகளை விளக்கினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பல உறுப்பினர்களை கண்தானம் செய்ய முன்வைத்தனர். சவுதி வாழ் பிரபல சமூக சேவகர் திரு. ஜெயசீலன் அவர்களுக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




