இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!

E-mail அச்செடுக்க
"காங்கிரஸ் ஆட்சியை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வந்த பின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவே ராகுல் விரும்புகிறார்" என காங்கிரஸ் தலைவர் தங்கபாலு  தெரிவித்து இருக்கிறார்.

"வெள்ளையனே வெளியேறு இயக்கம்" நினைவுகூரும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில்  நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  தங்கபாலு பேசும் போது, "சுதந்திரம், ஜனநாயகம், மதசார்பின்மையைக் காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் தான் முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளை யார் வேண்டுமானாலும் பெற முடியும். ஆயிரம் கட்சிகள் வந்திருக்கலாம், ஆயிரம் தலைவர்கள் தோன்றியிருக்கலாம். காங்கிரஸ் கட்சி என்றால் காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என்ற வரலாறு தான் உண்டு.

சோனியா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 125 வது ஆண்டு விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம். எதிர்கால இந்தியாவை எதிர்நோக்கி இருக்கிறார் ராகுல். அவர் நினைத்திருந்தால் மத்திய அமைச்சர், பிரதமர் பதவியை அடைந்திருக்க முடியும். அந்தப் பதவிகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு தெரிந்து கொண்டும், காங்கிரஸ் ஆட்சியை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வந்த பின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவே ராகுல் விரும்புகிறார். சோனியாவுக்கு கட்டுப்பட்டு, அவரது திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்