இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காஷ்மீர் வன்முறை - பிரதமரின் உயர்மட்ட குழுவில் நாரயன் மூர்த்தி

E-mail அச்செடுக்க

ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அம்மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சி நடவடிக்கைகள் வகுப்பதற்காக பிரதமர், உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார்.  ஆந்திர மாநில முன்னாள் கவர்னரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான டாக்டர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் இன்போஷிஸ் நாராயன் மூர்த்தி, தருன் தாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்று காஷ்மீர் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு மன்மோஹன் சிங், காஷ்மீர் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தான் அங்கு தொடர்ந்து இருந்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்றார். இக்குழு அம்மாநில மக்களுக்குரிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பொருளாதார நடவடிக்கைக்கான செயல்களை மேற்கொள்ளும் என்றார்.

பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை தற்காத்து பேசிய பிரதமர், கஷ்டமான சூழ்நிலையில் பணி புரியும் ராணுவத்தினரின் செயல்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார்.


கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்