இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அமெரிக்க விசா கட்டண உயர்வால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு

E-mail அச்செடுக்க

புது டில்லி: அமெரிக்க அரசாங்கத்தின் விசா கட்டண உயர்வால் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வணிக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க வணிக பிரதிநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் விசா கட்டண உயர்வால் இந்திய நிறுவனங்களுக்கு ஆண்டொண்றுக்கு சுமார் 200 மில்லிய டாலர்கள் அதிக செலவழிக்க நேரிடும் என தெரிவித்துள்ளர். சென்ற மாதம் அமெரிக்க செனட் சபை தொழில் வல்லுனர்கள் அதிகம் விரும்பும் ஹெச் 1 B, எல் விசா கட்டணத்தை சுமார் 2000 டாலர் என உயர்த்த வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இதனால் மற்ற எல்லா நாடுகளையும் விட இந்திய தொழில் நுட்ப வல்லுனர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வேலை செய்ய வழங்கப்படும் இவ்வகை விசாக்களில் சுமார் 12% இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்