புதுடெல்லி: பிளாக்பெர்ரி செல்ஃபோன் நிறுவனம் தங்களுக்கு மொபைல் சேவை கண்காணிப்பு தொழில்நுட்ப வசதிகளை வருகின்ற 31ம் தேதிக்குள் செய்து தர தவறினால் பிளாக்பெரி மொபைல் சேவைகளை தடை செய்யப்போவதாக அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் அனைத்து செல்போன் நிறுவனங்களும் தங்களது சேவை செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் எல்லா தொழில்நுட்ப வசதிகளையும் செய்து கொடுத்துள்ளன. ஆனால் இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெரி மொபைலில் இல்லை. இதனால் பயங்கரவாதிகள் பிளாக்பெரி மொபைல் போன் பயன்படுத்தி பயங்கரவாத திட்டங்களை நிறைவேற்றுகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து, பிளாக்பெரி நிறுவன சேவைகளையும் தனது கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, பிளாக்பெரி நிறுவனம் தனது மொபைல் சேவையை கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செய்து கொடுக்காவிட்டால், அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




