சிட்னி : டான் பிராட்மேன் தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றாலும் தற்போது விஞ்ஞான பூர்வமாகவே அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக சிறந்த பேட்ஸ்மேன்களை பற்றி கணக்கிடும் போது அவர்களின் ரன்கள், விக்கெட்டுகள், காட்சுகள் போன்றவை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும். ஆனால் தற்போது இவ்வாய்வில் விளையாடிய பிட்சுகளின் தன்மை, ஆட வரும் போது அணியின் நிலை, வெவ்வேறு சூழல்கள், தொழில்நுட்பம், விளையாடிய காலம் என பலவும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதர வல்லுநர்கள் உபயோகப்படுத்தும் சூத்திரங்களை பயன்படுத்தி விஞ்ஞானபூர்வமாக இவ்வாய்வு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் யாரை எதிர்த்து ஆடினார்கள், எந்த பவுலருக்கு எதிராக எத்துணை ரன் எடுத்தார்கள் என்பதும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. உதாரணத்துக்காக பங்களாதேஷூகு எதிராக எடுக்கும் சதமும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுக்கும் சதமும் ஓரே மதிப்பை பெறுவதில்லை.
அது போல் சொந்த மண்ணில் எடுத்த ரன்கள். அன்னிய மண்ணில் எடுத்த ரன்கள் என எல்லாவற்றையும் பட்டியலிட்டு பார்த்தால் க்ரீம் பொல்லாக், கேரி சோபர்ஸ், வால்டர் ஹெம்மாண்ட் போன்றவர்கள் எதிர்பார்த்ததை விட கீழாகவும் ஸ்டீவ் வாஹ், ஆதம் கில்கிறிஸ்ட், ப்ரையன் லாரா, ஆண்டி ப்ளவர் போன்றவர்கள் மேலாகவும் உள்ளனர்.
ஒரு அணியின் மொத்த ரன்னில் தனி வீரரின் ரன்கள் எனும் அடிப்படையிலும் டான் பிராட்மேன், ஹெட்லி, லாரா முதல் மூன்று இடங்களை வகிக்கின்றனர். மற்றவைகளில் 2வது இடத்திலிருந்து மாற்றம் உள்ளதே தவிர எல்லா நிலைகளிலும் பிராட்மேனே முதலிடம் வகிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். முழுமையான ஆய்வு முடிவுகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

| < முந்தையது | அடுத்தது > |
|---|




