கொழும்பு: இந்தியா, இலங்கை, நியூசிலாந்து மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரு முறை விளையாட வேண்டும்.
புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 200 ரன்னில் நியூசிலாந்திடம் தோற்றது. 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. இன்று நடந்த மூன்றாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது இந்திய அணியின் பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை விக்கெட்டுகள் சரிந்தன.
ஆட்டத்தின் 22 ஓவர் நடந்தது கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது மழை நின்ற பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இலங்கை வீரர்கள் சற்று நிதானமாக விளையாடி ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர். 46.1 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தில்சான் 62 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், ரன்தீவ் 43 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய இந்தியா 34.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தனர். இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சேவாக் 100 பந்துகளில் 99 ரன் எடுத்து அவுட்டாக வில்லை. இதில் 11 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். டோனி 23 ரன் எடுத்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




