இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நோ பாலுக்காக சேவாக்கிடம் மன்னிப்பு கோரிய சுராஜ் ரந்திப்

E-mail அச்செடுக்க

கொழும்பு : நேற்று நடந்த இந்திய இலங்கை அணிகளுக்கிடையான கிரிக்கெட் போட்டியில் சேவாக்கை சதம் அடிக்க விடாமல் டெஸ்ட் தொடரிலும் ஒரு நாள் தொடரிலும் ஒரு நோ பால் கூட போடாத சுராஜ் ரந்திப் வேண்டுமென்றே பைஸும் நோ பாலும் போட்டது சர்ச்சையை கிளப்பியது.

 

இச்சூழலில் சுராஜ் ரந்திப் தன் செயலுக்காக சேவாக்கிடம் மன்னிப்பு கேட்டதாக இலங்கை அணியின் மேலாளர் அனுரா தென்னகூன் கூறினார். மேலும் அவர் இது சம்பந்தமாக விரிவான விசாரணை நடத்தி இலங்கை கிரிக்கெட் போர்டிற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார். அறிக்கையில் உள்ள விபரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

இன்னும் ஐந்து ரன் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையிலும், சேவாக் சதம் அடிக்க ஒரு ரன் தேவைப்பட்ட நிலையிலும் சுராஜ் ரந்திப் முதல் பந்தை 4 வைடாகவும் 4வது பந்தை மிகப் பெரிய நோ பாலாகவும் போட்டிருந்தார். இது இலங்கை அணியின் வழக்கமான தந்திரம், மோசமான நடத்தை என்று கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் கூறியிருந்தனர். சேவாக்கும் இது சகஜமான ஒன்று என்றாலும் கிரிக்கெட்டின் விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும் அதன் உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்