மும்பை : சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒரு தின போட்டி, 20 /20 என மூன்று வடிவங்களிலும் ஏராளமான போட்டிகளில் விளையாடி வருவதால் ஓய்வெடுக்க முடியவில்லை. எனவே போட்டிகளின் அளவை குறைத்து கொள்ள வேண்டும் என்று வீரர்களின் கருத்தை பரீசிலிக்குமாறு இந்திய அணி நிர்வாகம் பி.சி.சி.ஐக்கு வேண்டுகோள் அனுப்பியிருந்தது.
இது சம்பந்தமாக பி.சி.சி.ஐ அனுப்பியுள்ள பதிலில் வீரர்கள் ஆண்டு முழுவதும் விளையாடுவதும், அதிக மேட்சுகள் விளையாடுவதும், அதனால் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறுவதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜம் தான் என்றும் தங்களுக்கும் தங்கள் ஸ்பான்ஸர்கள், பிற நாட்டு போர்டுகளுடான ஒப்பந்தங்கள் என எல்லாவற்றையும் அனுசரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் கூறியுள்ளனர். ஓய்வு தேவைப்படும் வீரர்கள் தேவைப்பட்டால் போட்டி தொடரிலிருந்து விடுப்பு எடுத்து கொள்வதில் பிரச்னையில்லை என்றும் இது வரை ஒரு வீரரும் அதிகாரபூர்வமாக புகார் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
வீரர்கள் அதிக போட்டிகளில் விளையாடி அடிக்கடி காயம் அடையும் பிளிண்டாப் மற்றும் ஷேன் பாண்டை உதாரணம் காட்டியிருந்தனர். ஆனால் பி.சி.சி.ஐயோ சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாகிர் கானை உதாரணம் காட்டியுள்ளது. அவர்கள் இருவரும் தேவைப்படும் போது விடுப்பு எடுத்து கொள்கின்றனர் என்றும் சுட்டி காட்டியுள்ளது.
மேலும் கடந்த ஜனவரி 2009-லிருந்து ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 19 டெஸ்டுகளும் 50 ஒரு தின போட்டிகளும் ஆடியுள்ள நிலையில் இந்திய கேப்டன் தோனியோ 11 டெஸ்டுகளும் 42 ஒரு தின போட்டிகளுமே ஆடியுள்ளார். ஆனால் ரிக்கி பாண்டிங் ஓய்வுக்காக ஐ.பி.எல் விளையாடுவதிலிருந்து ஒதுங்கி கொண்டார். ஆனால் தோனியோ ஐ.பி.எல்லில் முழு மூச்சாய் மூழ்கினார்.
எனவே ஒய்வு தேவைப்படும் வீரர்கள் ஏதேனும் போட்டி தொடரிலிருந்து விலகி கொள்ளலாம். அனைத்து தொடரிலும் விளையடியே ஆக வேண்டும் என்று யாரையும் பி.சி.சி.ஐ கட்டாயப்படுத்துவது இல்லை. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா குறைவான போட்டிகளிலேயே விளையாடுவதாய் குறிப்பிட்டுள்ள பி.சி.சி.ஐ வீரர்கள் தங்களுக்கு ஒரு தொடருக்கு 60 இலட்சம் ரூபாயும் ஆட்ட தொகையாக ஒரு கோடி பகிர்ந்தளிக்கப்படுவதையும் பற்றி மூச்சு விடுகிறார்களா என்றும் கேட்டுள்ளது. எனவே முடியாதவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்கட்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|





All Sportmen, Politicians, Business Men etc., etc., .............................................. are only working for thier own use except some people.
Those exception case peoples love to the ob for the country.