இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பேச்சுவார்த்தைக்காக 3 மாதங்களுக்கு தாக்குதலை நிறுத்த தயார்: மாவோயிஸ்டுகள்

E-mail அச்செடுக்க
நாட்டின் 64வது சுதந்திர தின உரையின் போது பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.  இந்நிலையில், மாவோயிஸ்டுகள் சண்டையை நிறுத்தி விட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, எங்களது முன்னணி தலைவர் ஆசாத் ‌அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த சமயத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த பட்சத்திலும் அரசு தான் வன்முறையை தூண்டி விடுகிறது என்பதை‌யே உணர்த்துகிறது.

3 மாதங்களுக்கு சண்டையை நிறுத்த தயாராக இருப்பதாகவும் அந்த கால கட்டத்தில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ‌தொலைபேசி மூலம் கிஷன்ஜி தெரிவித்துள்ளார்.


மாவோயிஸ்டு தலைவரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்