இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அமெரிக்காவில் H1B விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு!

E-mail அச்செடுக்க

வாஷிங்டன்: அமெரிக்காவிற்குப் பணியாற்றச் செல்லும் இந்திய தொழில் நுட்ப கலைஞர்களின் வேலைக்கான ஹெச் 1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு பன் மடங்கு உயர்த்தியிருப்பது உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று இந்திய வர்த்தக அமைச்சம் கூறியுள்ளது.

அயல் நாட்டில் இருந்த அமெரிக்காவிற்கு வந்து பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் விசா கட்டணத்தை அமெரிக்க அரசு பன்மடங்கு உயர்த்தியுள்ளது, உலக வர்த்தக அமைப்பின் விதிமுன்றைகளின்படி ஒரு சுயபாதுகாப்பு நடவடிக்கையாகும். எனவே விசா கட்டண உயர்வை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியாவால் முறையிட முடியும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய வர்த்தக அமைச்சகத்தின் செயலர் ராகுல் அமெரிக்காவின் நடவடிக்கையை பார்த்துக்கொண்டு இந்தியா வாய்மூடி சும்மா இருக்காது. உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு இது எதிரானது இப்பிரச்சனையை உலக வர்த்தக அமைப்பின் பரிசீலனைக்குக் கொண்டு செல்வோம்" என்று கூறியுள்ளார்.

H1B விசா கட்டண உயர்வால் அஙகு தொழில் நடத்தும் இந்திய தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு 200 மில்லியன் டாலர் நஷ்டமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்