நியூயார்க் நகரில் சென்ற 2001 செப்டம்பர் 11 அன்று தகர்க்கப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்துக்கு அருகில் நிறுவப்பட்டுவரும் பல்லடுக்குக் கட்டடத்தின் தரைத்தளத்தில் மசூதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த மசூதி அமைப்பதற்கு வலதுசாரி அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதும், அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆதரவை நல்குவதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஒபாமாவின் இக்கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு "அமெரிக்காவை அந்தரத்தில் ஒபாமா விட்டு விட்டார்" என்று கிண்டல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தனது கருத்தை சற்றே மாற்றிய ஒபாமா மதச் சுதந்திரத்துக்குத் தான் தனது ஆதரவு என்றும் இரட்டைக் கோபுரம் இருந்த இடத்திற்கு மிக அருகே மசூதிகளை நிறுவுவது பதற்றத்தை உண்டுபண்ணக்கூடும் என்றும் கருத்தை மாற்றிக் கூறினார்.
இந்நிலையில் NBC தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் முன்னர் தான் தெரிவித்த கருத்துக்காக வருந்தவில்லை என்றும், அக்கருத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

எழுதியவர்: Sathiyaraj, August 23, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|




