ஈரான் வரும் ஆண்டுக்குள் மேலும் 10 யுரேனியம் செறிவூட்டல் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான முயற்சிகளைத் தொடங்க இருப்பதாக அந்நாட்டின் அணுசக்தி நிறுவனத் தலைவர் அலி அக்பர் சாலிஹி தெரிவித்துள்ளார். ஈரானிய அரசு தனது நிறுவனத்திடம் மேலும் 10 யுரேனியச் செறிவூட்டலுக்கானத் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான பணிகளை ஒப்படைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஈரான் ஒரு போதும் அணு ஆயுதம் தயாரிக்க இந்த யுரேனியத்தைப் பயன்படுத்தாது என்றும், தனது மின்சக்தி தேவைக்காகவே இத்தொழிற்சாலைகள் அமைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்திருக்கும் இவ்வேளையில் இப்படிப்பட்ட அறிவிப்பு பின்னடைவை ஏற்படுத்தாதா என்ற கேள்விக்கு, பிற நாடுகளின் தடை தங்களின் மின்சக்தித் தேவைக்கு பதிலாக அமையாது என்றும் அவர் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




