இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

திமுக, அதிமுக ஒன்றிணைந்து குரல்!

E-mail அச்செடுக்க
நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த உத்தேசித்துள்ள மத்திய அரசின் முடிவை எதிர்த்து மாநிலங்களவையில் திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன.

இந்தப் பிரச்சனை குறித்து ஜீரோ நேரத்தின் போது, அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் பேசினார். மத்திய அரசின் இந்த முடிவு மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாகவும் உள்ளதாகவும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை இது பாதிக்கும் எனவும் அவர் கூறினார்.

பால் மனோஜ் பாண்டியனை ஆதரித்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசினார். கிராமப்புற மாவணர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு மிகவும் அரிதாக உள்ளதாக அவர் கூறினார்.

பொது நுழைவுத் தேர்வை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் நடவடிக்கை என்றும் திருச்சி சிவா கூறினார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்