இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அமைச்சர்கள் பன்னீர் செல்வம், அழகிரிக்கு வாயுக்கோளாறு- கருணாநிதி

E-mail அச்செடுக்க
நேற்று சேலம் உத்தமசோழபுரம் வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு கவுதமி திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.

வரவேற்றுப் பேசிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,முருகனுக்கு வீரபாகு. எனக்கு வீரபாண்டி ஆறுமுகம் என தலைவர் கலைஞர் சொல்வார். கட்ட பொம்மனுக்கு ஊமைத்துரை போல எனக்கு வீரபாண்டி என்றும் சொல்வார்.

பெரியார், அண்ணா வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றி வரும் முதல்வர் எங்கள் இல்லத் திருமணத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி, மாநாடு போன்ற இந்த மணவிழா நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர்கள் பன்னீர் செல்வமும், மு.க.அழகிரியும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நினைக்கிறேன். எனவே தான் திருமண விழாவை விட்டு வேறு எங்கோ சென்று விட்டார்கள் என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்