புதுடில்லி:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை சமீப காலத்தில் 9 டாலர் வரை அதிகரித்து தற்போது 81 டாலராக உள்ளது.பாராளுமன்ற கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரம் வரை நடக்கிறது. இப்போது பெட்ரோல் விலையை உயர்த்தினால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதை பெரிய பிரச்சனை ஆக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே பாராளுமன்றம் கூட்டம் முடிந்ததும் விலை உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது.
இதனால் மத்திய எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோலுக்கு 50 காசு முதல் 1 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இதை சரிகட்ட பெட் ரோல் விலையை லிட்டருக்கு 1 உயர்த்த எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
முன்பு பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த்தி வந்தது. இப்போது மத்திய எண்ணை நிறுவனங்களே விலையை தன்னிச்சையாக உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி எண்ணை நிறுவனங்களே பெட்ரோல் விலையை உயர்த்த உள்ளன.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




