ஐ.நா.வின் பொருளாதாரத் தடை மற்றும் அமெரிக்காவின் அச்சுருத்தல் ஆகியவற்றை மீறி ஈரான் ரஷ்யாவின் உதவியுடன் தனது அணு உலைகளில் எரிபொருளை நிரப்பும் பணியை தொடங்கியுள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரான் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் இந்த எரிபொருள் நிரப்பும் பணி நேற்றுக் காலை தொடங்கியது. யுரேனியம் சேமிப்புக் கிடங்கில் இருந்து சுமார் 80 டன் யுரேனியத்தை பாதுகாப்பாக கொண்டு வந்து அணு உலையில் நிரப்பி வருகின்றனர்.
ஈரானின் தெற்குப் பகுதியான "புஷேர்" என்ற இடத்தில் தனது முதல் அணுமின் நிலையத்தை அமைத்து, பின்னர் அதற்க்கு தேவையான யுரேனியத்தை ஈரானே செறிவூட்டியது.
இதற்கு அமெரிக்காவும், ஐ.நாவும் தனது கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அணு குண்டுகளை தயாரிக்கவே ஈரான் யுரேனியத்தை செறிவூட்டுவதாக குற்றம் சுமத்தியது. இதனை தொடர்ந்து ஐ.நா ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. ஐ.நா மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஈரான் அணுவுலையில் எரிபொருளை நிரப்பி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எரிபொருளை நிரப்பும் பணி இன்னும் 10 நாட்கள் தொடரும் என தெரியப்படுகிறது. இந்த பணி முடிவடைந்துவிட்டால் அணு உலை செயல்படத் தொடங்கி விடும்.
இது குறித்து ரஷ்யா கூறுகையில்: "ஈரானுக்கான மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய இந்த அணு உலைகள் மிக அவசியம்." இவ்வாரு ரஷ்யா கூறியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




