இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சுருங்கி வரும் சந்திரனால் பூமிக்கு ஆபத்தா?

E-mail அச்செடுக்க

நமது பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் சந்திரன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கொண்டு வருவதாக வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சந்திரனின் மேற்பரப்பில் பல விரிசல்கள் காணப்படுவதாகவும்  அதனால் அது மெதுவாக குளுமையடைந்து, சுருங்கி கொண்டுவருவதாகவும் அதனை ஆராய்ச்சி செய்துவரும் வானவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் பயப்படும்படியாக எதுவும் இல்லையென்றும், இந்த சுருக்கம் மிக மெதுவாக நிகழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த ஆய்வின்படி ஒரு காற்றடைத்த பலூனிலிருந்து காற்று மெதுவாக வெளியேறி சுருங்குவது போல, பூமியின் துணைக்கோளான சந்திரனின் உட்பகுதி குளிரடைந்து வருவதால் இதுவரை 100மீட்டர் வரை அதன் மேற்பரப்பின் சுற்றளவு சுருங்கி குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளே குளிரடைந்து வருவதால், சந்திரன் சுருங்குகிறது, அதன் மேல் ஓடு (crust) சுருக்கத்தின் காரணமாக பல சிறு சிறு பிளவுகள் ஏற்பட்டுள்ளன" என்று ஸ்மித்சொனியன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் தோமஸ் வாட்டர்ஸ் கூறியுள்ளார்

கருத்துக்கள் (3)Add Comment
0
...
எழுதியவர்: veeran, October 09, 2010
unmaiyagava
0
...
எழுதியவர்: PACHAIMUTHU, October 10, 2010
boomiyum idhaipola oru vilaivaal thaan indha maartrathai adaindhadhaaga padichirukken.
0
...
எழுதியவர்: rengaraj, April 20, 2011
Is there any changes in the gravitational force of the moon?

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்