அரசியல் கட்சித் தலைவர் மதன் தமாங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகோல் தமாங் இன்று குற்றப் புலனாய்வுத்துறையிடமிருந்து தப்பி ஓடி விட்டார்.
மேற்கு வங்காளத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. கழிப்பறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி நிகோல் தப்பித்து விட்டார்.
அனைத்து இந்திய கோர்கா லீக் தலைவரான மதன் தமாங் மே 21 ம்திகதி ஒரு பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கும்போது கொலை செய்யப்பட்டார்.ஆகஸ்ட் 16ம்திகதி கைது செய்யப்பட்ட நிகோலை மீண்டும் தேடும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டார்ஜிலிங் காவல்துறை கண்காணிப்பாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




